மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருள்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான செயற்திட்டத்தை முறைப்படி முன்னெடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மருந்து இறக்குமதியை நிர்வகிப்பது தொடர்பில் சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மருந்து உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கு தேவையான மூலப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதால், அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி அதற்கான நடைமுறைகளைத் தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
Discussion about this post