நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஹெகெகலிய ரம்புக்வெலவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றைத் தடையின்றி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த சில மாதங்களாகச் சுட்டிக்காட்டி வருகின்றது.
Discussion about this post