இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் விரைவில் உயிரிழக்கும் ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசியமான மருந்துகள் இல்லாததன் காரணமாக உயிர் காக்கும் சிகிச்சைகளை மருத்துவமனைகள் பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையிலேயே மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இலங்கை 80 வீதமான மருந்துகளை இறக்குமதி செய்கின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நிய செலவாணி முடிவடையும் நிலை காணப்படுவதால் அத்தியாவசிய மருந்துகள் முடிவடைந்து மருத்துவக் கட்டமைப்பு சீர்குலையும் நிலை காணப்படுகின்றது.
கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள அபேக்சா புற்றுநோய் மருத்துவமனையில் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகளும் அவர்களது குடும்பத்தவர்களும் மருத்துவர்களும் எதுவும் செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
பரிசோதனைகளையும் அவசர சத்திர கிசிச்சை உட்பட முக்கிய சிசிச்சைகளையும் ஒத்திவைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றன.
புற்றுநோயாளர்களை பொறுத்தவரை இது மிகவும் மோசமான நிலைமை, சிலநேரங்களில் காலைகளில் நாங்கள் சில சத்திர சிகிச்சைகளை செய்வோம், தற்போதுள்ள தட்டுப்பாட்டால் திட்டமிட்ட நாள்களில் சத்திர சிகிச்சைகளை செய்ய முடியாத நிலையில் உள்ளோம் என மருத்துவர் ரொசான் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் துரிதமாக மாற்றம் ஏற்படாவிட்டால் பல நோயாளிகள் மரணதண்டனையை அனுபவிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post