அயல் வீட்டில் வசிப்பவர் தன்னைத் தாக்கினார் என்று நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துவிட்டு வீடு திரும்பிய வயோதிபப் பெண் ஒருவர், வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி, வதிரியைச் சேர்ந்த சபாநாயகம் இலட்சுமிப்பிள்ளை (வயது-72) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர் நேற்றுப் புதன்கிழமை காலை நெல்லியடிப் பொலிஸ் நிலையம் சென்று, தனது அயல்வீட்டுக்காரர் தன்னைத் தாக்கினார் என்று முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு செய்துவிட்டு வீடு திரும்பிய அவர், பிற்பகல் 2 மணியவில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post