யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமியைத் தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
4 வயதுச் சிறுமி கடுமையாகத் தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகியிருந்த நிலையில், சிறுமியை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில் சிறுமியின் சிறுமியின் வாய்பேச முடியாத தாயும் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டனர்.
சிறுமியின் தந்தை தலைமறைவாகியிருந்த நிலையிலை, பொலிஸார் தந்தையை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று காலை கைது செய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தாயாருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் மகளைத் தாக்கினேன். அதை வீடியோவாகப் பதிவு செய்தேன். அந்த வீடியே மனைவியின் கைபேசியிலிருந்து அவரது நண்பிக்கு சென்றுவிட்டது. அதுவே வெளியாகிவிட்டது என்று சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post