மெக்சிகோவில் மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்த அல்வாரோ (32) என்பவர், ஜூன் 29 அன்று தடைசெய்யப்பட்ட ஒரு போதைப்பொருளின் மயக்கத்தில் தனது மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
மெக்சிகோவின் கிழக்கு-மத்திய பகுதியில் உள்ள பியூப்லா (Puebla) நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்ட அல்வாரோ, மனைவியை கொலை செய்தது மட்டுமல்லாமல், அவரது மூளையை டாக்கோ எனப்படும் மெக்சிகோ நாட்டு உணவில் வைத்து சாப்பிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிசாசு தன்னை இக்குற்றத்தை செய்யும்படி கட்டளையிட்டதாக காவல்துறையிடம் அல்வாரோ கூறியதாக கூறப்படுகிறது. மரியா மாண்ட்செராட் (38) என்பவரை அல்வாரோ ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்திருந்தார்.
அவருக்கு 12 முதல் 23 வயது வரையிலான 5 மகள்கள் இருந்தனர். அல்வாரோ தனது மனைவியின் மூளையின் ஒரு பகுதியை டாக்கோவில் வைத்து சாப்பிட்டதாகவும், மரியாவின் உடைந்த மண்டையோட்டை சிகரெட் சாம்பலிடும் தட்டாக பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது மரியாவின் உடலை துண்டாக்கி பிளாஸ்டிக் பையில் வைத்துள்ளார். கொலை நடந்த 2 நாட்களுக்கு பிறகு, அல்வாரோ தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள அவரது வளர்ப்பு மகள்களில் ஒருவரை அழைத்ததாக கூறப்படுகிறது.
“நான் ஏற்கனவே அவளைக் கொன்று பைகளில் வைத்திருக்கிறேன். நீ வந்து உன் தாயாரை எடுத்து செல்” என அவர் தனது மகள்களில் ஒருவரை அழைத்து கூறினார் என மரியாவின் தாய் மரியா அலிசியா மான்டியேல் செரான் தெரிவித்தார்.
ஒரு கத்தி, உளி மற்றும் சுத்தியலால் மரியாவின் உடலை அவர் வெட்டியுள்ளார். கோகைன் உட்பட போதை மருந்துகள் எடுத்துக் கொள்வார். அவருக்கு மனநல பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் எனவும் மரியாவின் தாயார் கூறியிருக்கிறார்.
மேலும் அல்வாரோ, வளர்ப்பு மகள்களை உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக மரியாவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த கொலையும், அதனை தொடர்ந்து அல்வாரோ செய்திருக்கும் கொடூரங்களும் வெளிச்சத்து வந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Discussion about this post