மனநலம் குன்றிய 66 வயதுப் பெண் ஒருவர் வன்புணர்ந்த குற்றச்சாட்டில் 40 வயதான ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த 9ஆம் திகதி பெண்ணின் வீட்டுக்கு வந்த இந்த நபர், பெண்ணை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்று கூறப்படுகின்றது.
சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த பெண்ணின் 70 வயதான சகோதரியைத் தாக்கிக் காயமேற்படுத்திவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பாதிப்படைந்த இரு பெண்களும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து 10 நாள்கள் கடந்துள்ளபோதும், சந்தேகநபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னர் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டவர் என்று தெரியவருகின்றது.
Discussion about this post