வரலாற்றுத் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனையின் யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் இனந்தெரியாதவர்களால் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன.
மந்திரிமனையின் பின்புறம் காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பனவே பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மந்திரி மனை இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராக இருந்த நல்லூரில் அரச ஆட்சியோடு தொடர்புபட்ட ஒரு கட்டடமாகும்.
Discussion about this post