மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி 36 வயதுப் பெண்ணுக்கு மரணம் விளைவித்தவரின் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் 2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதலாம் திகதி நடந்த விபத்தில் 36 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய குற்றசாட்டில் 19 வஙயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுபோதையில் அவர் வாகனம் செலுத்தியமை மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. சந்தேகநபரும் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிவான், சந்தேகநபரின் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு வாழ்நாள்த் தடை விதித்தார். உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் கணவருக்கு தலா 2 லட்சம் ரூபா வழங்கவும், 6 குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு லட்சத்து 99 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
Discussion about this post