இலங்கையில் மண்ணெண்ணைக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நீடிக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணை உற்பத்தி செய்யப்படும் வரை இந்த பற்றாக்குறை நீடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவுக்கு நாட்டில் நிலவி வரும் பற்றாக்குறை காரணமாக மண்ணெண்ணைக்கான கேள்வி வெகுவாக உயர்வடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 600 தொன் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
மண்ணெண்ணை தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விமானங்களுக்காக பயன்படுத்தப்படுவதாலும் இந்த பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளும், மண்ணெண்ணைக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளும் கிட்டத்தட்ட ஒரே விதமானவை எனவும் ஓர் சிறு இரசானய மாற்றத்தால் இரண்டும் வேறுபடுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post