நாட்டின் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஊடகங்களுக்கு இன்றைய தினம் (04.06.2023) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல மற்றும் பாலிந்தநுவர பிரதேசங்களை மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக முன்னர் குறித்த நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 75 மி.மீ வரை, தொடர்ந்து மழை பெய்தால், மண் சரிவு அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், மண்சரிவு ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவை ஏற்படுமானால் விரைந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையினால் களுகங்கை ஆற்றின் குடோ கங்கை உபகுடா பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
Discussion about this post