இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணப் பொருள்களில் ஒரு தொகுதி
நிவாரணப் பொருள்கள் நேற்று (03) மட்டக்களப்பை வந்தடைந்தன.
கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் எடுத்துவரப்பட்ட நிவாரணப் பொருள்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்த், புகையிரத நிலைய பிரதம அதிபர் எஸ்.பேரின்பராசா உட்பட அதிகாரிகள் பலரும் சமுகமளித்திருந்தனர்.
இம்மாவட்டத்துக்கு 50,000 பக்கட் அரிசி மற்றும் 3,750 பக்கட் பால்மா என்பன பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்ததுடன், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாக இந்திய அரசாங்கத்திற்கு நன்றியையும் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுக்கும் குறித்த நிவாரணப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post