மட்டக்களப்பு மாநகர சபைக்கான 61 ஆவது சபை அமர்வு நேற்று காலை 10.30 மணியளவில் மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
முதல்வரின் வருகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சபை அமர்வில் முதல்வரின் தலைமையுரையினைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுகள் தொடர்பில் முதல்வரினால் கருத்து தெரிவிக்கப்பட்டதுடன், 2022 ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் முன்மொழியப்பட்ட திட்டங்களை விரைவாக அமுல்படுத்துதல் தொடர்பாகவும் மாநகர உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு வடிகாண்கள், வீதிகள் புணரமைப்பது தொடர்பாகவும், வீதிகளில் மின்குமிழ்கள் பொருத்துவதன் தேவைப்பாடுகள், கள்ளியங்காடு மின்தகன சாலை தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post