மன்னார் – மடுத்திருத்தலத்துன் திருவிழா இன்று லட்சோபலட்சம் பக்தர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
கடந்த இரு வருடங்களின் பின்னர் இம்முறை மடுப்பெருவிழா கோலாகலமாக இடம்பெறுகின்றமையால் பல லட்சம் பக்தர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
நேற்றும் பெருந்திரளான பக்தர்கள் மடுத்திருத்தலத்தை நோக்கி வந்த வண்ணமிருந்தனர். திருவிழாவை முன்னிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post