நிட்டம்புவ நகரில் இன்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக் கோரள உயிரிந்துள்ளார் என்று ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டதை அடுத்து அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தைக் கலைத்துச் சென்ற மக்கள் சூழ்ந்து கொள்ள முயன்றபோது, பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அதில் மூவர் காயமடைந்த நிலையிலும் பொதுமக்கள் தொடர்ந்தும் வாகனத்தை முற்றுகையிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார் என்று கூறப்படுகின்றது.
ஆயினும் பொலிஸார் அது தொடர்பான மேலதிக தகவல்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை.
Discussion about this post