ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்பீரிஸ், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தெரிவின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என்று சாகர காரியவசம் வௌியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் ஜி.எல்.பீரிஸ் 6 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், எந்த அடிப்படையில் இந்த அறிக்கையை விடுத்தீர்கள் என்றும், இந்த தீர்மானத்தை எடுக்கும் போது கலந்துகொண்டவர்களின் பெயர்களை குறிப்பிட முடியுமா எனவும் அவர் கேட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாப்பின் பிரகாரமா இந்த தீர்மானத்தை எடுத்தீர்கள் என்ற கேள்வி உள்ளிட்ட 6 கேள்விகளுக்கு மிக விரைவில் பதில் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post