புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று தெரிவித்த அவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நசுக்க முயல்கின்றார் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அச்சுறுத்தல்களுக்குப் பணியப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள், புதிய வடிவத்தில் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post