அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில், பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுவருடப் பிறப்பான நேற்று ஆறாவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. இதன்போது இரத்தினபுரி சிறிபாகம குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாளை நான் இந்தப் பதவியில் இருக்கமாட்டேன். என்னை வேலையிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை. இன்று நான் இங்கு வந்துள்ளேன்.
என்னைப் போல முதுகெலும்பு உள்ள நாட்டின் நெருக்கடி நிலைமையை புரிந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் இங்கு வரவேண்டும், என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே அவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post