எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா நிராகரித்துள்ளார்.
இன்றும், நாளையும் கொழும்பு கோட்டையில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் எதிர்ப்பில் ஈடுபடுவோர் பிரவேசிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று பொலிஸாரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்வைத்த இந்தக் கோரிக்கையை நேற்றுப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதிவான் அதை நிராகரித்தார்.
குற்றச்செயல் இடம்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குப் பொலிஸாருக்கு அதிகாரங்கள் உள்ளதால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது என்று நீதிவான் அறிவித்துள்ளார்.
Discussion about this post