யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

போதைப்பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப்பொருள் பாவனையில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வில் , மத குருமார்கள், யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விஜித குணரட்ன , பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Discussion about this post