இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் பகுதியாக வடக்கு மாகாணம் மாறியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார.
நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த நீதியமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தனது யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான பயணத்தின் நோக்கங்களில் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை தொடர்பான ஆய்வும் ஒன்று என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.
போதைப் பொருள் முகவர்கள் பெருமளவிலான போதைப் பொருளை வடக்கு மாகாணத்தின் ஊடாக நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் பெரும் சமுதாயப் பிரச்சினை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண மூத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.
Discussion about this post