போதைக்கு அடிமையானவர்களை சமூகத்துடன் இணைப்பதற்கு யாழ்ப்பாணம் நகருக்கு அண்மையில் மறுவாழ்வு நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் மாநகர் முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
பவ்ரல் அமைப்பால் நடத்தப்படும் மாற்றத்துக்கான பாதை கற்கை நெறியின் யாழ்ப்பாணம் மாவட்டப் பெண்கள் குழு நடத்தும் “போதையால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு திருநேல்வேலி முத்துத்தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ் மாநகர முதல்வர் என்ற ரீதியில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்பாட்டை முன்னெடுப்பதற்றாக அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விசேட கூட்டம் ஒன்றை விரைவில் ஒன்றிணைக்கவுள்ளேன்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சமூகத்துடன் இணைப்பதற்காக மறுவாழ்வு அளிக்கக்கூடிய விசேட நிலையம் ஒன்றை யாழ்ப்பாணம் நகருக்கு அண்மையில் அமைப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றோம்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைக்கு அனுப்பும்போது அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post