கொழும்பில் பல பகுதிகளில் வீடுகளில் மேலதிகமாக தங்கியிருக்கும் வெளிநபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொழும்பில் பல பகுதிகளில் வீடுகளில் மேலதிகமாக தங்கியிருக்கும் வெளிநபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
வீடுகளில் வெளிநபர்கள் தங்கியிருந்தால் அதனை கட்டாயம் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றங்களை தடுப்பதற்காக பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
Discussion about this post