அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
எம் தேசத்தை அங்கீகரித்தால் உன் தேசமும் வளம் பெறும், அன்று ஆயுத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழித்தாய் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்டப்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஷ் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
Discussion about this post