பொருள்களின் விலைகளை 2019ஆம் ஆண்டு இருந்த மட்டத்துக்குக் கொண்டு செல்வது இயலாத காரியம். எனவே படிப்படியாக வருமானத்தை அதிகரிப்பதே செய்யக்கூடிய ஒரே வழிமுறை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்கக் குறைந்தது மூன்று ஆண்டுகள் செல்லும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இளம் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுடன் இணைய வழியில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் முடியாவிட்டாலும் 2024ஆம் ஆண்டு முதல் எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதை ஆரம்பிக்க முடியும்.
நாம் சரியான வழியில் செல்ல வேண்டுமாயின் இந்த ஆண்டு சிரமமானதாகவே இருக்கும். 2023ஆம் ஆண்டில் இந்த ஆண்டை விடவும் சிறிய முன்னேற்றம் இருக்கும்.
2025 ஆம் ஆண்டே எமது வலுவான பொருளாதாரப் பயணத்தை ஆரம்பிக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post