இலங்கையின் நிலைவரம் உணர்வுபூர்வமானதாகக் காணப்படுகின்றது. இந்தத் தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது தொடர்பாகக் கவனம் செலுத்துகின்றது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், கேரள மாநிலத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் நிலைவரம் உணர்வுபூர்வமானதாகவும், குழப்பகரமானதாகவும் காணப்படுகின்றது. நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில்கூட அங்கு நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இலங்கை மக்கள் எங்கள் அயலவர்கள். நாங்கள் அவர்களுக்கு உதவுவதில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். அவர்கள் மிகவும் நட்புணர்வு மிக்கவர்கள். கடந்த சில மாதங்களாக அந்த நாட்டுக்கு நாம் மிகுந்த ஆதரவாக இருந்துள்ளோம்.
எங்கள் கவனம் இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பாகவும், அதற்கு எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பாகவுமே இருக்கின்றது.
நாங்கள் ஏனைய விடயங்களில் ஈடுபடவில்லை. சமூக ஊடகங்களில் வெளியாகும் அனைத்துக்கும் நாங்கள் பதிலளிக்க முடியாது என்றார்.
Discussion about this post