இந்தியாவின் மும்பையில் கடற்கரையில் உறவுக்கு வர மறுத்த காதலியை, காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் லுப்னா 28 வயதான ஜாவேத் சுக்தே என்பவர் 22 வயதான ஆகாஷ் முகர்ஜி என்ற
இளைஞனைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் மும்பை, பாந்த்ராவில் உள்ள கடற்கரைக்கு
நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
அன்றையதினம் குறித்த இளைஞனுக்கு பிறந்த தினம் என்பதனால், கடற்கரையில் அலையின் அழகை பார்த்துக்
கொண்டு காதலியிடம் நெருக்கமாக இருந்துள்ளார். எனினும் ஒரு கட்டத்திற்கு மேல் பொது இடத்தில் உறவு வைத்துக்
கொள்ள இளைஞன் முயன்றபோது அதனை குறித்த யுவதி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், தனது காதலியின் தலைமுடியை இழுத்துப் பிடித்து பாறையில் மோதியமையினால்,
மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், அதனை பொருட்படுத்தாது , தரதரவென இழுத்துச் சென்ற கடல்
தண்ணீரில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்துள்ளார்.
இதன்போது வலி தாங்க முடியாமல் குறித்த பெண் அலறி கத்தி கூச்சல் போட்ட நிலையில், பெண்ணின் அலறலை
கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் ஆகாஷை வெளுத்து வாங்கியதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல்
கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ஆகாஷை கைது செய்த நிலையில், தாக்குதலுக்குள்ளான
பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Discussion about this post