இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் உள்நாட்டு பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றவை எனக் கூறப்பட்டுள்ளது.
இதனை கோழி பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் உற்பத்தியாகும் முட்டைகள் 55 கிராம் முதல் 70 கிராம் வரை நிறையுடையது, ஆனால் தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 45 கிராம் நிறையை கொண்டவை.
இதேவேளை குறித்த முட்டையில் தேன் போன்ற வாசனையும் வீசுகிறது.
குறித்த முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு பல நாட்கள் ஆவதுடன், அவற்றுள் 50 வீதமானவை பழுதடைந்துள்ளன.
இலங்கை அரசு கோழிப் பண்ணை உற்பத்தியாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க முன்வருமாயின் வெளிநாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கோழிப் பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முட்டை விற்பனை தொடர்பில் கட்டுப்பாட்டு விலையை அறிவித்து வர்த்தமானி வெளியிடவில்லையாயின் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை 30 முதல் 35 ரூபாய் வரையில் விற்பனை செய்திருக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
அதேசமயம், நாட்டின் முட்டைகள் சந்தைகளில் காணப்பட்ட போதிலும் வர்த்தகர்கள் அவற்றை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே விற்பனை செய்கிறார்கள்.
நாட்டில் முட்டை தட்டுப்பாடு காணப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றும் வர்த்தக அமைச்சர் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post