இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்துள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதன் புதிய விலை 470 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய விலை 550 ரூபாவாகும்.
இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய விலை 460 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய விலை 520 ரூபாவாகும்.
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சியும் சிபெட்கோ விலை அதிகரிப்புக்கு நிகராக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
Discussion about this post