இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைப்பெறவுள்ள நிலையில், அதில் ரணில் விக்கிரமசிங்க சுமார் 140 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போது நாட்டுக்குத் தேவையான விடயங்கள் தொடர்பாக கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளேன்.
நான் உணர்ந்த வரையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்தது 140 வாக்குகளை பெற்று அனைவரின் ஆசியுடன் ஆட்சிக்கு வருவார்.
9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இலங்கையை மிக உயர்ந்த இடத்துக்கு உயர்த்தி காட்டுவார். இதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை, அவரை நம்புங்கள், அவர் 50 வருட அனுபவமுள்ள அரசியல் தலைவர் என்றார்.
Discussion about this post