யாழ்ப்பாணத்தில் 111 கைக்குண்டுகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி, அட்டகிரி பகுதியில் காணி ஒன்றை அதன் உரிமையாளர் துப்புரவு செய்தபோதே கைக்குண்டுகள் தென்பட்டுள்ளன.
இந்த விடயம் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 111 கைக்குண்டுகள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அவற்றைச் செயழிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்தனர்.
Discussion about this post