இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கொலன்னாவை கூட்டுறவு அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியைப் பெற்றது.
119 இடங்களில் 115 இடங்களை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிக்கொண்டது.
35 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் கோட்டையாக அறியப்படும் கொலன்ன தொகுதி கூட்டுறவுத் தேர்தலில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
இதேவேளை நாடு தழுவிய கூட்டுறவுத் தேர்தல்களில் 98 வீதத்துக்கும் அதிகமான பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சக்தி வென்றுள்ளது.
Discussion about this post