இந்தியாவின் கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.
பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு ரீக்லைட் என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கடந்த ஒரு வாரகாலமாக கொல்கத்தாவில் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெறுகின்றது.
கொல்கத்தாவில் ஆர்ப்பாட்ட பேரணிகள் சமூக ஊடகங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை தொடர்ந்து பெண்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர்.
மருத்துவர் கொலைக்கு எதிராக இந்தியாவின் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது பாலியல் வன்முறை சம்பவம் இடம்பெற்ற மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் மருத்துவமனையின் அவசரசேவை பிரிவை சேதப்படுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்ததுடன் கடும் மழையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.கொல்கத்தாவில் நாங்கள் இவ்வாறு பெருமளவு பெணகள் அணிவகுத்தை பார்த்ததில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறச்ப்ப்டுகின்றது. பெண்களிற்கு மதிப்பில்லை நாங்கள் காலநடைகளை விட மதிப்பற்றவர்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post