பெண் ஒருவரை சிறைப்படுத்தி, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, துஷ்பிரயோகம் செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இரு பொலிஸ் கொன்ஸ்டபிள்களுக்கு தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. குற்றவாளிகள் இருவரும் 15 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்று உத்தரவிட்டது.
பொலிஸ் கொன்ஸ்டபிள்களான எம். ஜயரத்ன மற்றும் எஸ். விஜேசிங்க ஆகியோருக்கே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது இரு பொலிஸ் கொன்ஸ்டபிள்களும், பெண்ணை சிறைப்படுத்தி துஷ்பிரயோகம் செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
Discussion about this post