திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப் புதையலைத் தேடியெடுக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டனர் என்று கூறப்படுகின்றது.
இரகசியத் தகவலுக்கு அமைய புதையல் தோண்டியவர்கள் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
Discussion about this post