தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில், மகன் வெட்டுப்புள்ளிக்குக் குறைவான புள்ளிகளைப் பெற்றதால் தாய் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரை மாய்க்க முயன்ற தாய் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட மருததுவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் சமூகத்துக்கு முன்னுதாரணமானவை அல்ல என்று சுட்டிக்காட்டும் புத்திஜீவிகள், பரீட்சைகள் மாத்திரம் ஒருவரது வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிராமப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் நகரப் பாடசாலைகளில் கற்பதற்கும், வருடாந்த குடும்ப வருமானம் குறைந்த மாணவர்களுக்கு மாதாந்தம் ஒரு தொகை உதவிப்பணம் பெற்றுக் கொடுப்பதற்காகவுமே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை உருவாக்கப்பட்டது.
இரண்டு அடிப்படை நோக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட. இந்தப் பரீட்சை இன்று பத்து வயது மாணவர்களின் உடல், உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் வகையிலான ஒரு பலப்பரீட்சையாக மாறிவிட்டது என்பது பலரதும் குற்றச்சாட்டாக இருக்கின்றது.
முக்கியமாக இது தாய்மாரின் பரீட்சையெனப் பெயர் பெற்றது. குடும்ப கெளரவம், சமூக அந்தஸ்தாக இந்தப் பரீட்சை மாறியுள்ளதமை கவலை தரும் விடயமாகும்.
Discussion about this post