மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (tabzumab) உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைகள் மற்றும் மஹரகம மருததுவமனை உட்பட பல மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசி உட்பட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரம் மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன என்று மருத்துவமனைகளின் பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
புற்று நோயாளர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டியுள்ள போதிலும், இந்த மருந்துகள் இல்லாததால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post