நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பயணாம் செய்யும் போது
அங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை என
விழங்க்கிகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே
அவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன. ஆகவே அனைத்து அரசியல்கட்சிகளும்
இதனை முன்னிறுத்தி செயற்படவேண்டியது அவசியமாகும் என இந்தியாவிற்கான
இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடகூறியுள்ளார்
இதை தவிர கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப்
பதவியேற்றுக்கொண்டதிலிருந்து இந்தியாவுடனான நல்லுறவு தொடர்பில்
உன்னிப்பாக கவனம் செலுத்திவந்திருக்கின்றார் என்று தெரிவித்துள்ள அவர்,
இருநாடுகளும் சேர்ந்து பணியாற்றுவதுடன் இருநாடுகளின்
பொருளாதாரங்களுக்கு இடையிலான தொடர்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே
ஜனாதிபதியின் விருப்பம் என்று கூறியுள்ளார்
Discussion about this post