ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வகிக்கும் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பாகத் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்ற அவர்கள், இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இறுதியான போராட்டத்துக்கு கொழும்புக்கு வரவேண்டும் என்றும், உயிர்களை தியாகம் செய்தேனும் போராட்டத்தை வெல்ல வேண்டும் எனவும் பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார்.
மக்களை தூண்டி விடும் வகையில் பொன்சேகா கருத்து வெளியிட்டு வருகின்றார் என்று அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறுதிப் போரில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவுக்கு 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினார்.
Discussion about this post