நான்கு நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதில் அனுப்பியுள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான எனது முன் அழைப்பை ஏற்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நான் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தேன், அதனை மாற்ற முடியாது.
உங்கள் கட்சி உறுப்பினர்களில் யாரையாவது அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள் என்று அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
Discussion about this post