ஒரு லீற்றர் பாலின் விலையை 200 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டும் என்று சிறிய பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது திருத்தப்பட்டுள்ள வரிகள் காரணமாக கால்நடைத் தீவனங்களின் விலைகள் அதிகரித்தமை, புற்கள் வெட்டும் இயந்திரங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை போன்றவற்றால் ஒரு லீற்றர் பாலை 100 ரூபாவுக்கு விற்பது போதுமானதாக இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்காமை, அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய நிவாரணை உரிய வகையில் வழங்காமை உள்ளிட்ட காரணிகளால் இந்தத் தொழிற்றுறை வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாது என்றும் சிறிய பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post