யாழ். மாவட்டத்தில் பாணின் விலை தொடரந்தும் 200 ரூபாவாகவே இருக்கும் என்று யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கமும், வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கமும் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக அந்தச் சங்கங்கள் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் நாட்டின் இதர பகுதிகளில் பாணின் விலை அதிகரிக்கப்பட்டபோது நாம் பாண் விலையைக் கட்டுப்படுத்தி 200 ரூபாவாக வைத்திருந்தோம்.
நாட்டின் ஏனைய இடங்களில் ஒரு இறாத்தல் பாண் 220 ரூபா முதல் 250 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டிருந்தது.
தற்போது நாட்டின் ஏனைய இடங்களில் பாணின் விலை சிறிதளவு குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் ஏற்கனவே இலாப நோக்கமற்று பாணின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் பாண் விலையில் மாற்றம் ஏற்படாது.
கோதுமை மா விநியோக நிறுவனங்களான பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலைகளைக் குறைக்கும் சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாணின் விலை குறைக்கப்படும் என்றுள்ளது.
Discussion about this post