பொகவந்தலாவை, செல்வகத்தை தோட்டப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் ஒருவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் 18 வயதுடைய பாரதி தர்ஷன் என்ற மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை ,சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியைக் கண்டு களித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் குறித்த மாணவன் காணாமல்போயுள்ளார்.
மாணவனை நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள் தேடிய நிலையில், குறித்த மாணவனின் சடலம் கிணறு ஒன்றில் இருப்பதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.
இதையடுத்து சடலம் மீட்கப்பட்டு பொகவந்தலாவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post