நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவமானது இன்று காலை தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே மல்லாகம் சந்தியில் இருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
எரிபொருள்களின் விலைகள் நாட்டில் உச்சம் தொட்டுள்ள நிலையில் விலையேற்றத்தை பிரதிபலிக்கும் முகமாக குறித்த ஆசிரியர்கள் இவ்வாறு மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
Discussion about this post