முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இலங்கை கடுமையாகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நிதியமைச்சராக பஸில் ராஜபக்ச எடுத்த தீர்மானங்களே அதற்கு முக்கிய காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கடந்த பல மாதங்களாக நடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காதிருந்த பஸில் ராஜபக்ச, கடந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார். எதிர்கட்சிகள் பஸில் ராஜபக்சவை நோக்கிச் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தபோதும் அவர் அவற்றுக் குப் பதிலளிக்காதிருந்தார்.
Discussion about this post