நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
பஸில் ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றது என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கட்சி மட்டத்தில் உள்ளக ரீதியான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, நிதியை பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அறிவிக்காமை, நாட்டில் பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்காமை மற்றும் பதிலளிக்காமை ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி செயற்குழு ஆகியன கலந்துரையாடி விரைந்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post