பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு நடந்த நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நடந்த சந்திப்பிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருடனான சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சுற்றுலாத்துறை அதிகாரிகள், அடுத்த ஆண்டில் 8 இலட்சம் சுற்றுலாத்துறையினரை நாட்டுக்கு வரவழைக்க எதிர்பார்க்கப்படுகின்றது என்றும், அதன்மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் கடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பிரதமர், எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்காக பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
3.5 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் இலங்கை, 2025ஆம் ஆண்டளவில் சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது.
1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்ட கால வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
Discussion about this post