Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

பலத்த பாதுகாப்புடன் இலங்கை வந்த முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா்

March 13, 2024
in இந்தியா, இலங்கை
பலத்த பாதுகாப்புடன் இலங்கை வந்த முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோர் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவருக்கும் இலங்கை தூதரகத்தில் இன்று புதன்கிழமை (13.03.2024) நோ்காணல் நடைபெற்று வருகின்றது.

மூவரும் அழைத்துச் செல்வதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நளினி தாக்கல் செய்துள்ள மனு
சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்து வாழ விரும்புகிறோம்.

எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இலங்கை துணை தூதரம்
முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா்.

இதன்படி இன்று திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

Previous Post

இந்தியாவை தொடர்ந்து கனடா செல்லும் அனுர குமார திசாநாயக்க

Next Post

கோட்டபாய நாட்டை விட்டு செல்ல உதவி செய்த தேரர்!

Next Post
கோட்டபாய நாட்டை விட்டு செல்ல உதவி செய்த தேரர்!

கோட்டபாய நாட்டை விட்டு செல்ல உதவி செய்த தேரர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.