இலங்கையின் வான்வெளி முழுவதும் ஒரு பில்லியன் டொலருக்கு இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்க, ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்காக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் நாட்டுக்குத் துரோகமிழைத்துள்ளது என்று கூறினார்.
அண்மையில் இந்தியா சென்றிருந்த பஸில் ராஜபக்ச இதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுளளார் என்று கூறிய அசோக அபயசிங்க, இதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை என்று கூறினார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மறுத்துள்ளனர். ஆயினும் அரசாங்கமோ, நிதியமைச்சரோ இது தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
Discussion about this post