பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணமான பெண்களுக்கு வேறொருவருடன் மீண்டும் திருமணம் செய்துவைத்த சம்பவம், விசித்திரமான சம்பவம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாிவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் கூட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ரூ.51,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை பயன்படுத்தி மோசடி செய்ய விரும்பிய சிலர் , பாலியா பகுதியில் கூட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த திருமண நிகழ்வில் 568 பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், திருமணத்திற்கு போதிய பெண்கள் கிடைக்கவில்லை.
பணத்திற்காக திருமணம் ஆன பெண்களுக்கு மீண்டும் திருமணம்
இதனால் ஏற்கனவே திருமணம் ஆன பெண்களை பணத்திற்காக மீண்டும் அழைத்து வந்து திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வைத்ததுடன், அங்கே பார்வையாளர்களாக வந்து நின்ற சில பெண்களுக்கும் ஆசை வார்த்தை காட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ளனர்.
இதனால் பல பெண்கள் மணமேடையில் தனியாக நின்று கொண்டு தாங்கள் வைத்து இருந்த மணமாலையை தாங்களே கழுத்தில் போட்டு கொண்டு நின்றனர்.
திருமண ஜோடிகளாக இருந்தவர்களில் சிலர் அண்ணன் தங்கைகளாக இருந்ததாகவும், மணமகன் மற்றும் சிலர் தனியாக மாலையுடன் நின்றதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாரென்றே தெரியாத நபர்களுடன் பெரும்பாலான மணமகன் மற்றும் மணமகள்களை நிறுத்தி புகைப்படம் எடுத்துக் வைத்து, அந்த புகைப்படத்தை காட்டி அரசாங்கத்திடம் பணம் வாங்க சிலர் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது, அத்துடன் அரசு அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post